இனி சிகரெட் பிடித்தல், மது அருந்தினால் நடவடிக்கை! – போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

பணியின் போது மது அருந்தி வந்தாலோ அல்லது பணி நேரத்தில் புகைப்பிடித்தாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணிமனையில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் பணி தொடர்பான வழிமுறைகளை போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டுள்ளது.

கோயில்களுக்குள் யாகங்கள் நடத்த கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி!!

அதன் படி, பணிமனை உள்ளே வரும் பேருந்துகள் 3 கி.மீ வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் பேருந்திற்குள் வெல்டிங் பணி செய்யும் போது கட்டாயம் பேட்டரி வயர் துண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தொழில்நுட்ப பணிகளுக்காக, பணிமனைக்குள் இயங்கும் பேருந்துகளை, ஓட்டுநர் உரிமம் இல்லாத பணியாளர் இயக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் வேகமெடுக்கும் எபோலோ வைரஸ்!! 30 பேர் பலி!!

இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்திருக்க வேண்டும் எனவும் பேருந்து இயக்கப்படும் போது, செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்கள் பணி நேரத்தில் பனிமனையில் இருந்து செல்ல வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் இதனை கிளை மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment