News
டெல்லி முதல்வர் வேட்பாளர் யார்? பாஜகவின் ஆச்சரிய முடிவு

டெல்லியில் முதல்வர் வேட்பாளர் யார் என அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பி பாஜகவினரை திணறடித்த நிலையில் தற்போது அதற்கான விடை கிட்டத்தட்ட கிடைத்துள்ளது
கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்து மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானியை டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அமித்ஷா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

இது குறித்து அறிவிப்பு வெளிவந்தால் டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு அடையும் என்று கூறப்படுகிறது ராகுல் காந்தியையே தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடிப்பதில் ஒரு பெரிய பிரச்சனை இருக்காது என்றே பாஜக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது
டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேர்தல் என்பதும், வாக்கு எண்ணிக்கை 11ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
