தடுப்பூசி போட்டால் ஸ்மார்ட்போன்: அதிரடி அறிவிப்பு

d7cf70aa57a186df622d7abf727a5d18

 தடுப்பூசி போட்டால் ஸ்மார்ட்போன்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டுமென தமிழக அரசின் சுகாதாரத்துறை தினந்தோறும் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த வகையில் அவ்வப்போது தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாம் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 10 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு மொபைல் போன் 3 பேருக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடுபவர்களூக்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment