ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு: முதலமைச்சரிடம் அறிக்கை!!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

தமிழகத்தில் சென்னை, கோவை, கோவை, ஈரோடு உட்பட 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதற்கிடையில் தமிழக முதல்வர் நேரடியாக ஆணையம் மேற்கொண்டு இதுதொடர்பாக விசாரணை அமைக்கப்படும் என கூறப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது தமிழக முதல்வரிடம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் அறிக்கையை சமர்ப்பனம் செய்துள்ளார். அதன் படி, அதிமுக ஆட்சியில் ஊழல் நடைப்பெற்றதா? மத்திய,மாநில அரசுகள் வழங்கிய நிதியானது முறையாக பயன்படுத்தப்பட்டதா? போன்ற அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதன் அடிப்படையில் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்பதை எதிர்பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.