சிறுசேமிப்பு திட்டம் மோசடி: 15 கோடி ரூபாயோடு தப்பி ஓடிய நிறுவனர்! கிராம மக்கள் குமுறல்;

நம் தமிழகத்தில் அதிக அளவு தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன. அதோடு மட்டுமில்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்கள் மையமாகக் கொண்டு சீட்டு கம்பெனிகள் அதிகமாக வந்துள்ளன. ஒரு சீட்டு கம்பெனி பணம் மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சில கம்பெனிகளோ பணத்தை ஏமாற்றி விட்டு தலைமறைவாகிவிடுகின்றனர்.

இந்த நிலையில் திருச்சுழியில் சிறுசேமிப்பு சீட்டு நடத்தி 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சிறுசேமிப்பு சீட்டு நடத்தி மக்களிடம் ரூபாய் 15 கோடி மோசடி செய்தவருக்கு வலை. தமிழ் பாடி கிராமத்தைச் சேர்ந்த தனபாலகிருஷ்ணன் என்பவரிடம் சிறுசேமிப்பு திட்டத்தில் மக்கள் பணம் செலுத்தினார்.

தமிழ்பாடி, சாமிநத்தம், சித்தலகுண்டு, ஒத்தவீடு கிராம மக்களும் சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தனர். பத்தாண்டுகளாக சீட்டு நடத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தனபாலகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

பணத்தை பறி கொடுத்தவர்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுக்க போலீசார் அறிவுறுத்தல் வழங்கினர். சிறுக சிறுக சேமித்த பணம் மோசடி செய்யப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment