சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு; வெளியானது முக்கிய அறிவிப்பு!

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் 43 அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை கிண்டி திருவிக தொழில்பேட்டைகள் டான்சிக்கு சொந்தமான 3.08 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு சிட்கோ கூட்ட முயற்சியில் சுமார் 200 தொழில் முனைவோருக்கு உடன் பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் 175 கோடி செலவில் உருவாக்கப்படும் இதன் மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

தமிழ்நாடு சிட்கோ மூலம் விருந்தொளி முனைவோர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 48 ஆயிரம் சதுர பரப்படை அளவில் சுமார் 350 நபர்களுக்கு நேரடியாகவும் 200 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய 26.24 கோடி மதிப்பீட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் பல அடுப்புகள் கொண்ட அடுக்குமாடி வளாகம் கட்டப்படும்

தமிழ்நாடு சிட்கோ மூலம் குறுந்தொழில் உடையவர்களின் தேவையை பூர்த்தி செய்ய 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் 250 நபர்களுக்கு நேரடியாக 150 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் 22.64 கோடி மதிப்பு மதுரை மாவட்டம் கே. புதூர் தொழிற்பேட்டையில் பல அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்

4. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தகோட்டையில் 55 ஏக்கர் சுமார் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் 25.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழில் பேட்டை சிட்கோ மூலம் அமைக்கப்படும்

5. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளி கொளத்தூரில் 28 ஏக்கரில் ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் 14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழில் பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

6. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் முத்தூரில் 34 ஏக்கரில் 1400 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் பயணித்து கோரி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழில் பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்

11 அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்கி தற்போதைய திட்டம் மதிப்பின் உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்படும் இதற்கான மாநில ம், 1.25 லட்சத்திலிருந்து 3.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்

12. அரசால் செயல்படுத்தப்படும் சுய வேலை வாய்ப்பு திட்டங்களான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு திட்டம் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் ஆகிய திட்டங்களின் மூலம் அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்படக்கூடிய வகையில் உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 35 லிருந்து 45 வயதாகவும் சிறப்பு பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 55 ஆக உயர்த்தப்படும்

13. கடந்த நிதியாண்டில் 30 கோடியாக இருந்த தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியல் இனத்தவர் புத்தொழில் நிதி இந்த நிதி ஆண்டில் 50 கோடியாக உயர்த்தப்படுகிறது

14. பட்டியலின மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு எளிதாக கடன் பெறுவதற்கு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்ட அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் சிறப்பு வழிகாட்டி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்

15 நகர்புற குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்கூடங்கள் மற்றும் தொழில் குழுமங்களை அப்பகுதியில் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காக நகருக்கு வெளியே மாற்றி அமைக்க முன்வரும் தனியார் தொழில் குழுமங்கள் மற்றும் தனியார் தொழில் முனைவோர்களுக்கு ஊக்குவிக்க 75 சதவீதம் அரசு நிதி உதவி மானியம் வழங்கும் திட்டத்திற்கான குறைந்தபட்ச நிலபரப்பு தேவையானது பத்து ஏக்கரில் இருந்து இரண்டு ஏக்கராக குறைக்கப்படும்

16 தொழில் முனைவர் அமைப்புகள் மூலம் உருவாக்கப்படும் தனியார் தொழில் பேட்டைகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் 50 சதவீதம் நிதி உதவி பெறுவதற்கான குறைந்தபட்ச நில தேவை 50 ஏக்கரில் இருந்து 10 ஏக்கராக மாற்றி அமைக்கப்படும்

அதிகரித்து வரும் தொழில் முனைவோர்களின் தேவைக்கேற்ப புதிய தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு குறைந்து வரும் அரசு நிலத்தை சார்ந்து இருக்காமல் தமிழ்நாடு சிட்கோவில் குறைந்த விலையில் தனியார் நிலத்தை விரைவாக வாங்குவதற்கு வசதியாக வரும் ஆண்டில் புதிய தனியார் நில கொள்முதல் கொள்கை உருவாக்கப்படும்

19. கோயம்புத்தூர் நகரில் மாநில அரசு மானியத்துடன் 7.33 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒரு பாக்கு மட்டை பொருட்கள் குழுமம் அமைக்கப்படும்

புத்தொழில் செயல்பாடுகளை மாநில முழுவதும் பரவலாக்கும் நோக்கத்தில் சேலம் கடலூர் மற்றும் ஓசூரில் வட்டார புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும்

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புத்தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் ஒரு புத்தொழில் உற்பத்தி மையம் நிறுவப்படும் இதில் தகுதியானவர்களுக்கு மூன்று வருட காலத்திற்கு வாடகைக்கு இடம் வழங்கப்படும்

தென்னை நார் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டியினை கருத்தில் கொண்டு நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊத்தி வைக்கும் வகையில் தென்னை நார் தொழில் கொள்கை உருவாக்கப்படும்

சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதற்காக பிரத்யோகமாக ஓசூரில் புதிய தாய்க்கோ ( TAICO ) வங்கி கிளை திறக்கப்படும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.