ரேஷனில் சிறு தானியம், தேங்காய் எண்ணெய்: அமைச்சர் சக்கரபாணி தகவல்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் படிபடியாக சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநாடு சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாடு நடைப்பெற்று வருகிறது. இதில் அதிகளவிலான சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு திருவிழா தொடங்கியது!

இதன் காரணமாக உலக சாதனையில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

வருகின்ற ஆண்டுகளில் சிறு தானியங்களை ஊக்குவிக்கும் விதமாக அரிசியை படிபடியாக குறைத்து சிறு தானியங்கள் ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் இல்லை: தாயின் சடலத்தை சுமந்த மகன்!

அதே போல் கோவையில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.