டுவிட்டர் ஊழியர்களுக்கு தூங்கும் அறைகள்.. எலான் மஸ்க் செய்த ஏற்பாடு

டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தூங்கும் அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் என்பதும் அதன் பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது தெரிந்ததே.

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தவரின் வேலை உள்பட பலரது வேலைகள் பறிக்கப்பட்டன என்பதும் அதுமட்டுமின்றி தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் வேலை செய்யும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

sleep

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது சில சலுகைகளை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோர்வாக இருந்தால் சிறிது நேரம் தூங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதை அடுத்து ஊழியர்கள் தூங்குவதற்காக சிறப்பு அறைகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான பிரான்சிஸ்கோவில் உள்ள அலுவலகத்தில் தூங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆரஞ்சு நிறத்தில் தரைவிரிப்பு படுக்கை மேஜை மற்றும் மெத்தை, மேஜை விளக்கு நாற்காலிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இந்த புதிய ஏற்பாடுக்கு ஊழியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.