திறன் பயிற்சி: திறன் மேம்பாட்டு கழகம்-பிரிட்டிஷ் கவுன்சில்; முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இளைஞர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கொண்டே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதிலும் நம் தமிழகத்தில் இப்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே டேலண்ட் எக்ஸாம் என்ற திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிகளிலேயே திறனாய்வு பயிற்சியினை பெற்றுக்கொள்கின்றனர்.

இருப்பினும் திறன் பயிற்சி வழங்க பிரிட்டீஷ் கவுன்சில் இடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி திறன் மேம்பாட்டு கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

உயர் கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து சிறப்பு பயிற்சி வழங்க ஏதுவாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. தமிழக இளைஞர்களின் பல்வகை திறன்களை மேலும் மெருகேற்ற ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இளைஞர்களின் உயர் கல்வி, திறன் மேம்பாடு, கலை, அறிவியல் மற்றும் பண்பாடு ஆகியவை மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment