
பொழுதுபோக்கு
எஸ்கே.20 படம்! வெளியான வேற லெவல் அப்டேட்!
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. ‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியிட்டுள்ளனர்.டான் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
டான் மற்றும் டாக்டர் திரைப்படம் மூலம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிளப்பில் இணைந்திருக்கும் சிவகார்த்திகேயன், தமிழின் முன்னணி நாயகன் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். டான் வெற்றிக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்,இதற்கு தற்காலிகமாக எஸ்.கே 20 எனப் பெயரிடப்பட்டது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் எஸ்கே 20 படக்குழு, விநாயகர் சதூர்த்திக்கு படம் வெளியாகும் என அறிவித்தனர். அதற்கேற்ப படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
சிங்கம் படத்தின் நான்காம் பாகமா? ஓட்டம் பிடித்த ரசிகர்கள்..!!
இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் படி சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே.20வது படத்தின் பெயர் ‘பிரின்ஸ்’ என அவைக்கப்பட்டுள்ளார்.மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் பெயரை வெளியிட்டது படக்குழு
#SK20 titled as #Prince.#Sivakarthikeyan pic.twitter.com/hC975AWUn3
— Manobala Vijayabalan (@ManobalaV) June 9, 2022
I think #SivaKarthikeyan had a photoshoot with the same white shirt for #Prince’s first look 🤍😃 pic.twitter.com/7bPGCdqD44
— KARTHIK DP (@dp_karthik) June 9, 2022
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாடடத்தில் உள்ளனர்.
