ஒரு சில நடிகர்கள் என்னதான் சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அந்தளவுக்கு நிலை நிற்க மாட்டார்கள். ஆனால் சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே சின்னத்திரையை விட்டு வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டு இருக்கிறார் பிரபல நடிகர்.
அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான டாக்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றுக் கொடுத்தது.
இதனால் குஷியில் இருந்த சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடித்துள்ளார். அதன்படி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.
இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் “பே-bae” என்ற பாடலின் ப்ரோமொ ஒன்று வெளியாகியுள்ளது .
அந்த ப்ரோமொ பார்க்கும்போது இது காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது என்றே தெரிகிறது. இதனால் பாடல் முழுவதும் வெளியாகி இணையதளத்தில் வைரலாகும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.