தமிழ்சினிமாவை பொறுத்த வரையில் முன்னணி நடிகர்களுள் இருவதாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரிய ரைபோஷப்கா நடித்துள்ளார். அதே போல் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான பிரின்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பலகலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் வசூலிலும் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இதன் காரணமாக சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து நஷ்டத்தின் பாதி தொகையான 6 கோடியை விநியோகஸ்தர்களுக்கு வழங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போது மாவீரன் படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் படத்தினையும் அதே நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஜினி வழியில் சிவகார்த்திகேயன் செல்வதற்கு கோலிவுட் வட்டாரங்கள் வியப்பாக பேசிகின்றனர்.