Entertainment
வெளியானது எஸ் ஜே சூர்யாவின் “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம்!
நடிகர், இயக்குனர் என இருவேறு முகங்களைக் கொண்டவர் “எஸ் ஜே சூர்யா”. நடிகர் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் வெளியாகிய “மெர்சல்” என்ற திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்து வெற்றி நடை போட்டது. இந்நிலையில் தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சம் மறப்பதில்லை”. இத்திரைப்படத்தில் இவருடன் நடிகை “ரெஜினா” நடித்துள்ளார்.

நடிகை ரெஜினா நடிப்பில் வெளியாகிய “கேடி பில்லா கில்லாடி ரங்கா” என்ற திரைப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள “நெஞ்சம்மறப்பதில்லை” இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா” இசையமைத்துள்ளார். திரைப்படத்தினை பிரபல இயக்குனர் “செல்வராகவன்” இயக்கியுள்ளார்.
நிலையில் திரைப்படமானது பல்வேறு தடைகளை தாண்டி இன்று வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது..
