Connect with us

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

SJ Suryah with Vijay65

பொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தளபதியின் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், குஸ்பு ,நாசர் ஜெயசுதா, சங்கீதா கிருஷ் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.

Dil Raju next with Vamsi and Vijay 2

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்டதாக அதைத்தொடர்ந்து தற்போழுது காமெடி காட்சிகள் படமாக்க பட்டுள்ளததாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கும், இந்த படத்தில் மேலும் ஒரு பிரபலமான நடிகரும், டைரக்டருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார் , இவர் இந்த படத்தில் கேமியோ ரோலுக்கு வருவார் என கூறப்படுகிறது. சில நிமிடங்கள் வந்தாலும் இவர் நடிப்பில் அனைவரும் தொற்று போகத்தான் வேண்டும் என்பது குறிப்படதக்கது.

vijay 2 look

இந்த படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா 2 நாட்கள் மட்டும் தேதி கொடுத்துள்ளார்,மேலும் திரைக்கதையில் மிக முக்கியமான கட்டத்தில் தோன்றுவார் என்றும் விஜய்யுடன் ஒரு பயங்கரமான உரையாடல் காட்சி படத்தில் அமைவதாகவும் கூறப்படுகிறது, இந்த வசனங்கள் படம் வெளியீட்டிற்குப் பிறகு அதிகம் பேசப்படும் என தகவல் வந்துள்ளது.

அஜித் 61 படத்தின் அப்டேட்! சூட்டிங் செட் காட்சியிடன் வெளியான வைரல் வீடியோ!

சமீபத்தில் மாநாடு,டான் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லனாக நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து தற்போழுது வாரிசு படத்திலும் அவரையே நடிக்க வைக்க டைரக்டர் வம்சியிடம் விஜய் தான் ரெக்கமன்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top