நடராஜன் யாருன்னே தெரியாம ஃபோட்டோ எடுத்த எஸ் ஜே சூர்யா.. அதன் பின்னர் நடந்த சுவாரஸ்யம்..

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா, தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆகியோர் ஒருமுறை சந்தித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் தனது பயணத்தை இயக்குனராக அறிமுகமாகி தற்போது மிரட்டும் நடிப்பையும் தனது கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் வெளிப்படுத்தி வருபவர் தான் எஸ் ஜே சூர்யா.

அஜித், விஜய் உள்ளிட்ட பலரையும் தனது திரைப்படங்களில் இயக்கியிருந்த எஸ். ஜே. சூர்யா, பின்னர் சில திரைப்படங்களை இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். தொடர்ந்து தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்ட எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் ஏதாவது திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களின் விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிக வித்தியாசமாக இருந்து வருகின்றது.

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் இருந்து கிரிக்கெட் வீரர்களே அரிதாக தேர்வாகி வரும் நிலையில் சேலத்தின் ஒரு கிராமத்தில் இருந்து வந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிரட்டல் பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தவர் தான் நடராஜன். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி இருந்த நடராஜன், ஏராளமான முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

அப்படி இருக்கையில், நடராஜன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர், ஹைதராபாத்தில் சந்தித்து கொண்ட போது நடந்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். இது பற்றி ஒரு நேர்காணலில் எஸ் ஜே சூர்யா பேசுகையில், “எனக்கு கிரிக்கெட் பற்றி சுத்தமாக எதுவும் தெரியாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் உள்ளது. சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜனை அவரது குடும்பத்தினருடன் நான் ஒரு முறை சந்தித்தேன். நான் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த போது என்னை பார்த்த நடராஜன், ஹலோ சார் என்றார். அவரது மகளும் உடன் இருக்க, அவரை கொஞ்சி கொண்டும் இருந்தேன்.

அப்போது நடராஜன் என்னிடம் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளவா என கேட்க, நானும் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்டேன். இதனைத் தொடர்ந்து, நானும் கிளம்பிய போது எனது அசிஸ்டன்ட்கள் நாங்களும் போட்டோ எடுத்துக் கொள்கிறோம் என கூறினார். என்னுடன் நீங்கள் எதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என ஒன்றும் தெரியாதவனாக கேட்க, நடராஜனுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கூறினார்கள்.

அப்போது தான் அவர் யார் என எனது அசிஸ்டன்ட்களிடம் கேட்க, கிரிக்கெட் வீரர் நடராஜன் என என்னிடம் கூறினார்கள். ‘சாரி சார். எனக்கு தெரியாது’ என்று நானும் நடராஜனிடம் கூறினேன். அவ்வளவு தான் எனக்கு கிரிக்கெட்டுடைய அறிவு” என எஸ் ஜே சூர்யா கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...