சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் படு பயங்கரமான கெட்டப்பில் எஸ்.ஜே.சூர்யா

18e748469883d383afd587381f3ea4df

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் குறித்து செம மாஸ் தகவல் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இத்திரைப்படத்தை அட்லியின் உதவியாளரான சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். மேலும் இதில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது இத்திரைப்படம் குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இத்திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் இவர் நடிப்பதாக நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது எஸ்.ஜே.சூர்யா சிம்புவின் மாநாடு திரைப்படத்திலும் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.