
Entertainment
எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு: எச்சரித்த நீதிமன்றம் !!
வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஜே.சூர்யா வரி செலுத்தாமல் இருந்ததால் அவருக்கும் 7 கோடியே 57 லட்சம் ரூபாய் வருமான வரியை செலுத்த வேண்டும் என எஸ்.ஜே.சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பட்டது.
இந்நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த நோட்டீஸ்ஸை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.சந்திரசேகரன் வந்தது.
அப்போது வருமான வரி செலுத்த பல முறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் இதற்கு எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதிடப்பட வேண்டும் என கூறினார்.
மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
