நடிகர் எஸ்.ஜே சூர்யா முதன் முதலில் நடித்த படம் பாண்டியராஜன் நடித்த நெத்தி அடி திரைப்படம் பெரும்பாலோனோருக்கு அது தெரியாது.
அதில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பார்.
இதன் பின் இவர் இயக்குனராக அவதாரமெடுத்து இயக்கிய முதல் படம் அஜீத் நடித்த வாலி திரைப்படம்.
அந்த படத்தின் வெற்றியால் குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது வெற்றியடைந்த உடன் இவர் வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை நியூ போன்ற சற்று அடல்ஸ் ஒன்லி படங்களை இயக்கியதால் இவர் மீது தவறான முத்திரை விழுந்தது.
பின்பு அது போல விசயங்களில் இருந்து சமீப காலமாக நல்ல படங்களில் நல்ல ரோல்களில் நடிக்க கற்றுக்கொண்டார்.
கடைசியாக இவர் நடித்த மாநாடு படம் வெற்றி அடைந்த நிலையில் இவரது கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது.
அதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது விஷாலை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க இருக்கிறார்
இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
This is Huge!
The Unexpected combination of @VishalKOfficial & @iam_SJSuryah in #V33 directed by @Adhikravi produced by @vinod_offl pic.twitter.com/3Kpmli3SEP— Sreedhar Pillai (@sri50) January 1, 2022