Connect with us

ராம் சரண் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவா? அதுவும் முக்கிய வேடத்திலா!

Shankar Ram Charan Movie Villain Final detailsd

பொழுதுபோக்கு

ராம் சரண் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவா? அதுவும் முக்கிய வேடத்திலா!

மெகா பவர்ஸ்டார் ராம் சரண் ‘RRR’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் சண்முகம் இயக்கத்தில் தனது அடுத்த பெரிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அமிர்தசரஸில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது.

ssj

அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். அது மட்டும் 20 நாட்கள் வரை நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பில் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.சமீபத்தில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டி இருந்தார். சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லனாகவும் , டான் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த மெகா படத்திலும் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் கிசுகிசுகள் பரவுகிறது.

NTLRG 20220706124725281059

ஃப்ளாஷ் பேக் காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தோன்றுவார் என கூறப்படிகிறது . மேலும் விரைவில் செட்டில் இணைவார் என கூறப்படுகிறது. எஸ்.ஜே. சூர்யா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் பரவி வருகிறது.

sj suryah likely to be cast in ram charan shankar movie 001

விஜய்யின் வாரிசு – 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பிரெஞ்சு நாவலின் தழுவலா?

RC 15 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் அரசியல் நாடகமாக இருக்கும், இதில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்க தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top