
தமிழகம்
61 நாள் மீன்பிடி தடை காலம்- இன்று நள்ளிரவுடன் முடிவு!!!
பொதுவாக அதிகம் பாதிப்பினை சந்திப்பும் தொழில் அல்லது வேலை என்றால் அதனை மீன்பிடித்தொழில் என்றே கூறலாம். ஏனென்றால் பல நேரங்களில் கடல் சீற்றத்துடன் இருந்தால் அவர்களால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலைமை ஏற்படும்.
மேலும் மழை காலங்களில் பெரும்பாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவுக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. சுமார் 61 நாள் மீன்பிடி தடை காலம் நிலவிய நிலையில் இன்று நள்ளிரவு முடிவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1750 விசைப்படகுகளில் 8 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். அதுவும் இந்த மீன் பிடித்த காலத்தின்போது வங்ககடலில் பெரும்பாலான பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
