6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: முதல்வர் நேரில் ஆய்வு!

நம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மெகா தடுப்பூசி முகாம் ஆனது தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். ஆனால் அசைவ பிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வாரம் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடந்துள்ளது.மெகா தடுப்பூசி முகாம்

ஏனென்றால் அசைவ பிரியர்களால் தடுப்புசி செலுத்தி அன்றைய தினம் அசைவம் சாப்பிட முடியவில்லை என்பதும் ,தடுப்பு செலுத்தினால் பலருக்கும் உடல்சோர்வு ஏற்படும். இதனால் அவர்களால் அன்றைய தினம் அசைவம் சாப்பிட முடியாத நிலை காணப்படும்.

இதுவரை தமிழகத்தில் 6 தடுப்பூசி முகாம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் சென்னையில் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை எழில் நகரில் இன்றைய தினம் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை நேரில் சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது போன்று தமிழகத்தில் பல பகுதிகளில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று தடுப்பூசிகள் பெருவாரியாக செலுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment