Connect with us

“ஆறு ஒன்றிய கவுன்சிலர்கள் அதிரடி நீக்கம்!” ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவு!

News

“ஆறு ஒன்றிய கவுன்சிலர்கள் அதிரடி நீக்கம்!” ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவு!

6abffd08c481bcdad4ec3cd7040f3bc1

தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக அதிமுகவின் ஆட்சி நடைபெற்றது. இதில் இந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது எதிர்கட்சியாக உருமாறியுள்ளது. ஆயினும் அதிமுகவின் பலம் மேற்கு தமிழகத்தில் தற்போது வரை காணப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். மேலும் கட்சிக்குள் தற்போது சமரசமாகவே காணப்படுகிறது.9dcf89e3398100dd94c03912dba870b1

இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் தொடருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கூட்டாக சில ஒன்றிய கவுன்சிலர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஆறு ஒன்றிய கவுன்சிலர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உத்தமபாளையம் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த அந்த ஆறு கவுன்சிலர்கள் தற்போது கட்சியிலிருந்து நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதீஸ்வரன், அந்தோணி, மூக்கம்மாள் மற்றும் அறிவழகன் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கவுன்சிலர்கள் செல்வி, கலைச்செல்வி ஆகியோரும் அதிமுகவிலிருந்து திடீர் நீக்கம் செயல்பட்டதாகவும் ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர், ஆறு கவுன்சிலர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நிர்வாகிகள் சந்திரசேகரன், பிரசாந்த் ஆகியோரும் நீக்கப்பட்டதாக கூறுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top