மீண்டும் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி!

b7730c644bbd4aa37bfeea31247334ba

சென்னை அருகே உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையிலும், அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் குணமாகிய பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சற்று முன்னர் சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற சிவசங்கர் பாபாவுக்கு ஒரு சில நாட்களிலேயே இருமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment