சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேக பொருட்களை கொடுக்கலாம்!!

cdba47b793ed780533a3831a0d7efe9d

அரக்கர்கள், தேவர்கள் இணைத்து அமிர்தம் வேண்டி, மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி , ஒரு பக்கம் அசுரர்களும், இன்னொரு பக்கம் தேவர்களும் இழுத்து பாற்கடலை கடைந்தனர். வலி தாங்காமல் வாசுகி பாம்பு விசத்தை கக்க, அந்த விசமெல்லாம் ஒன்று திரண்டு ஆலகால விசமாகி பிரபஞ்சத்தையே அழிக்க புறப்பட்டது.

அனைவரையும் காக்கவேண்டி, அனைத்து உயிர்களும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தன. சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளையும் காக்க முற்பட்டு, ஆலகால விஷத்தை தானே உண்டார். ஆலகால விசம் சிவனை கொன்றுவிடுமோ என அஞ்சிய பார்வதி, அவரது தொண்டைப்பகுதியை அழுத்தி பிடித்தாள். ஆலகால விஷம் சிவப்பெருமான் தொண்டையிலேயே நின்றுவிட்டது.

தொண்டையிலேயே நின்றுவிட்ட விஷம் சிவப்பெருமான் உடலை, மிகவும் வெப்பமாக மாற்றியது. சிவப்பெருமான் உடலின் வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

0807cfa32d19963c8700e2a659a493c5

அபிஷேகப்பிரியரான சிவப்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சை, எண்ணெய், அரப்பு பொடி, என 32 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்விக்கப்படும். சிவப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்கள் தங்களால் ஆன, பொருட்களை கொடுப்பது வழக்கம். சிவனுக்கு அபிஷேகப்பொருட்களை கொடுப்பது புண்ணியத்தை தரும். மேலும் அதிக நற்பலன்களை பெற, அவரவர் ராசிக்கு தகுந்த பொருட்களை சிவப்பெருமான் அபிஷேகத்திற்கு கொடுத்தால் மேலும் அதிக நற்பலன்களை கொடுக்கலாம்.

எந்தெந்த ராசிக்காரர்கள், என்னென்ன பொருட்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்…

859239abdc95476c82b8ed8173711e8a

மேஷம் – வெல்லம் கலந்த நீர் அதாவது பானகம்

ரிஷபம் – தயிர் .

மிதுனம் – கரும்புச்சாறு

கடகம் – சர்க்கரை சேர்த்த பால்

சிம்மம் – சிவப்பு சந்தனம் கலந்த பால்

கன்னி – பால் மற்றும் சுத்தமான தண்ணீர்

துலாம் – பசும்பால்,

விருச்சிகம் – தேன் அல்லது சர்க்கரை கலந்த் நீர்

தனுசு – குங்குமப்பூ கலந்த பால்

மகரம் – நல்லெண்ணெய்

கும்பம் – கடுகு எண்ணெய் அல்லது இளநீர்

மீனம் – பசும்பால்

இவற்றை கொடுத்து நற்பலன்களைப் பெறுக!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.