சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்த கோவிலில் சிவவாக்கியர் சித்தர் வழிபட்டு ஜீவசமாதியடைந்துள்ளார். இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற ஒன்று உள்ளது இந்த உத்தரவு பெட்டியில் , சிவன்மலை முருகன் கனவில் வந்து சொன்னதாக கூறப்படும் பொருள் பூக்கட்டி போட்டு முருகன் முன் உத்தரவு கேட்கப்படும்.

சாதகமான உத்தரவு வந்தால் அடுத்த பொருள் வரும் வரை அந்த பொருளே பெட்டியில் தொடரும். தற்போது அருகே உள்ள ஊரை சேர்ந்த சிவராம் என்ற பக்தர் கனவில் வந்த நெல் வைத்து வழிபடப்பட்டு வருகிறது.

இதனால் மழை அதிகம் பொழிந்து விவசாயம் செழிக்கும் பஞ்சம் பசி தீரும் என்ற நம்பிக்கௌ உள்ளதாக சிவாச்சாரியார்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.