சிவகாசி: பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி சிறப்பான தொழில் காணப்படும். அவற்றுள் ஒன்று தான் பட்டாசுகள் உற்பத்தி. இத்தகைய பட்டாசு தொழிலுக்கு பெயர் போன ஊர் தான் சிவகாசி. இந்த சிவகாசியை குட்டி ஜப்பான் என்றும் அழைப்பார்கள். இங்கு உற்பத்தி செய்ய பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் மற்றும் உலக நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இத்தகைய சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாக காணப்படுகிறது. ஆனால் அதைவிட பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே காணப்படுகிறது. ஒரு தீப்பொறி ஏற்பட்டால் கூட அது மிகப்பெரிய இறப்பை தந்துவிடும்.

இதனால் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்தின் காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து நிகழும். இந்த நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி என்ற 34 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே நான்கு பேர் தீ  விபத்தில்  உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment