சிவகாசி வெடி விபத்தில் அதிரடி திருப்பம்… போர்மென்கள் 2 பேர் கைது!!

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பட்டாசு தொழிற்சாலை செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200 ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொழிற்சாலையின் ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் வேலையில் 2 ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சீதோசன சூழ்நிலை காரணமாக, மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கி திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி( வயது 58) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகாசி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ் (வயது48) என்பவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த தொழிற்சாலை வளாகத்தை வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் (போர்மேன்கள்) காளியப்பன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்து, மேலாளர் கோபால் சாமியையும், உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.