
செய்திகள்
இந்த விஷயத்துல அஜித், விஜய்ய பாலோ பண்ணா கரெக்டா இருக்கும்!! ஸ்கெட்ச் போட்ட SK;
தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்துக்கு அடுத்தப்படியாக பலரும் நம்பும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனென்றால் இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டு வருகிறது.
அதுவும் சமீப காலத்தில் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் காணப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முக்கிய பிரபல நட்சத்திரங்களை ஃபாலோ செய்து கதைகளை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21ம் திரைப்படத்தில் அவர் ஆர்மி ஆபீஸராக நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இதனை சன் பிக்சர்ஸ் மற்றும் கமலஹாசன் இணைந்து தயாரித்து உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
மேலும் அதற்கு மாவீரன் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஏனென்றால் நடிகர் கமலஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் ஒரு மிலிட்டரி ஆபிசராக மிரட்டி இருப்பார்.
மேலும் தல அஜித் ஆரம்பம் திரைப்படத்தில் ஆர்மி ஆபீசர் போன்று நடித்திருப்பார். தளபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்திலும், சூரியா வாரணம் ஆயிரம் திரைப்படத்திலும் சோல்ஜர் களாக நடித்திருந்தார்கள். எனவே இவர்களை ஃபாலோ செய்து நடிகர் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது .
இதனால் இவர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைகிறார். சிவகார்த்திகேயன் முதல் முறையாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
