Connect with us

சிவகார்த்திகேயனின் ஃபிரின்ஸ் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையை வாங்கியது யாரு தெரியுமா ?

siva pi

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் ஃபிரின்ஸ் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையை வாங்கியது யாரு தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கி விடாமுயற்சியின் வெற்றியாக தற்போழுது வெள்ளித்திரையில் அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்போழுது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படத்தில் நடித்துவருகிறார்.இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் அந்த படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.

தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார். இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பு 47 நாட்கள் மட்டுமே நடந்துள்ளதாம்,அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் வந்து நடித்துள்ளாராம் , அந்த நாட்களுக்குள்ளேயே அவருக்கான பகுதிகள் முழுமையாக எடுத்து முடித்துள்ளாராம் படக்குழு.

siva piii

படத்தில் சிவகார்த்திகேயன் சுற்றுலா தளங்களை சுற்றிக்காட்டும் கைடாக நடிக்கயுள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மில்லயன் கணக்கில் பார்வைகளை கடந்துவருகிறது.

சமீபத்தில் அப்படத்தின் ரீலிஸில் மாற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 21 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என இயக்குநர் அனுதீப் உறுதியான தகவல் அளித்துள்ளார்.

இந்த படத்தில் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் மற்றும் சாட்டிலைட் உரிமை விஜய் டிவி இரண்டையும் சேர்த்து 42 கோடி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top