சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கி விடாமுயற்சியின் வெற்றியாக தற்போழுது வெள்ளித்திரையில் அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படத்தில் நடித்துவருகிறார்.இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் அந்த படம் தான் பிரின்ஸ்.

siva1 1657387842

இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார். இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பு 47 நாட்கள் மட்டுமே நடந்துள்ளதாம்,அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் வந்து நடித்துள்ளார்.

படத்தில் சிவகார்த்திகேயன் சுற்றுலா தளங்களை சுற்றிக்காட்டும் கைடாக நடிகையுள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மில்லயன் கணக்கில் பார்வைகளை கடந்துவருகிறது. மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

images 24 5 1

ஆறு வேடங்களில் கலக்கும் கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மிரட்டிடலான டீசர் இதோ!

தற்போது அப்படத்தின் ரீலிஸ் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 21 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என இயக்குநர் அனுதீப் உறுதியான தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ள தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அக்டோபர் 9-ம் தேதி ப்ரின்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment