தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.
தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பு 47 நாட்கள் மட்டுமே நடந்துள்ளதாம்,அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் வந்து நடித்துள்ளாராம், இந்த 26 நாட்களுக்காக சிவகார்த்திகேயன் ரூ. 23 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார், இந்த படத்தில் பல காட்சிகள் காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.படமாக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணையும் இளம் ஹீரோ?
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ராணுவ வீரனாக நடித்து வருகிறார்.