Connect with us

கார்த்தியின் ‘சர்தார்’ படத்துடன் மோதத் தயாராகும் சிவகார்த்திகேயனின் புதுப்படம்!

siva karthi

பொழுதுபோக்கு

கார்த்தியின் ‘சர்தார்’ படத்துடன் மோதத் தயாராகும் சிவகார்த்திகேயனின் புதுப்படம்!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

 

 

maxresdefault 34

ஆனால் அதேநாள் தான் கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படமும் ரிலீசாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு படங்களும் திரையில் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதில் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட வெளியீட்டுத் தேதியை தீபாவளிக்கு மாற்றலாமா என யோசித்து வருகின்றனர்.அதே நாள் அஜித் நடிக்கும் 61வது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் ஆரம்பமாகி உள்ளதால் தீபாவளிக்கு படம் வெளிவர வாய்ப்பில்லை என உறுதியாக நம்பப்படுகிறது.

sivakarthikeyan 1550577385180

அதே வேளையில் தீபாவளிக்கு தான் கார்த்தி நடிக்கும் மற்றொரு படமான ‘சர்தார்’ படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். எனவே, ‘விருமன்’ஐ விட்டுவிட்டு ‘சர்தார்’ உடன் மோதலாம் என ‘பிரின்ஸ்’ படக்குழு நினைத்திருக்கலாம்.

விக்ரம் படம் ஓடிடி-யில் ரிலீஸ்! வெட்டி எடுத்த ஸ்பெஷல் காட்சிகள் வருமா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயன்,கார்த்தி படம் போதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போழுது தீபாவளிக்கு இருவரின் படமும் மோதயுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top