Connect with us

மாவீரன் படத்தின் சிவகார்த்திகேயனின் அம்மாவாகும் முன்னாள் ஹீரோயின்! மாஸான ரீஎன்ட்ரிபா!

maaviran sivaa

பொழுதுபோக்கு

மாவீரன் படத்தின் சிவகார்த்திகேயனின் அம்மாவாகும் முன்னாள் ஹீரோயின்! மாஸான ரீஎன்ட்ரிபா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படமான பிரின்ஸ் படத்தின் நடித்து வருகிறார், இந்த படம் தீபாவளிக்கு வெளிவர ரெடியாகவுள்ளது.

அதை தொடர்ந்து மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். இந்த படத்தை சக்தி டாக்கீஸ் தயாரிக்கயுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

sivaa

இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி சங்கர் நடிக்க ஒப்பந்ததாக்கியுள்ளார், முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடித்த விருமன் படம் இந்த மாதம் 12 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க வந்த அப்டேட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போழுது இந்த படத்தின் மாஸான தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது,

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக முன்னாள் நடிகை சரிதா நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சரிதா தமிழில் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான் படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் மொத்தமாக 141 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கார்த்தியின் ‘விருமன்’ பாடகியான அதிதி! யுவன் வெளியிட்ட கலக்கல் அப்டேட்!

சிறிது காலமாக சினிமா பக்கமே வராத நடிகை சரிதா ரீஎண்டரி கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகை மீண்டும் படத்தில் வருவதால் இந்த படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளது

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top