Connect with us

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஹீரோயின் சம்பளம் மட்டும் இவ்வளவா? அள்ளி கொடுக்கும் படக்குழு!

sivaa 1

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஹீரோயின் சம்பளம் மட்டும் இவ்வளவா? அள்ளி கொடுக்கும் படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படமான பிரின்ஸ் படத்தின் நடித்து வருகிறார், இந்த படம் தீபாவளிக்கு வெளிவர ரெடியாகவுள்ளது.

அதை தொடர்ந்து மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். இந்த படத்தை சக்தி டாக்கீஸ் தயாரிக்கயுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

maaviran sivaa 1

இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி சங்கர் நடிக்க ஒப்பந்ததாக்கியுள்ளார், முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடித்த விருமன் படம் இந்த மாதம் 12 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க வந்த அப்டேட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக முன்னாள் நடிகை சரிதா நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மாவீரன் படத்தின் பூஜையும் நடைபெற்று இருக்கிறது, இதில் ஷங்கரும் கலந்து கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

unnamed 4 2

குறிப்பாக அதிதி ஷங்கர்க்கு இது இரண்டாவது படம் , முதல் படம் இன்னும் வெளிவராத நிலையில் அடுத்தடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதிதி. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மாவீரன் படத்தில் அதிதி சம்பளம் 25 இலட்சம் என கூறப்படுகிறது.

நாக சைதன்யாவின் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவா? தெறி அப்டேட் !

அவர் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவருக்கு இந்த சம்பளம் அதிகம் என பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பளம் அவர் நடிப்புக்கானதாக இருக்காது சங்கர் மகள் என்பதற்க்காகவும் இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top