Connect with us

பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் குட்டி டான் பாத்திருக்கிங்களா? வைரலாக போட்டோ !

unnamed 19

பொழுதுபோக்கு

பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் குட்டி டான் பாத்திருக்கிங்களா? வைரலாக போட்டோ !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், முதலில் சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கியவர்,விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிவகார்த்திகேயன், பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்,தனது கடின உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்த்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. இந்த படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

image 2

அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். இந்த படத்தில் ஹீரோயினாக சங்கர் மக்கள் அதிதி நடிக்க யுள்ளார்.

சிவகார்த்திகேயன் 2010 இல் சொந்த மாமா பொண்ணு ஆர்த்தியை மணந்தார், மற்றும் அபிமான ஜோடி சமீபத்தில் தங்கள் 12 வது திருமண நாளை கொண்டாடியது. சிறப்பு சந்தர்ப்பத்தில், சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் எடுத்த காதல் நிறைந்த படத்தைப் பகிர்ந்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

WhatsApp Image 2022 09 08 at 3.41.51 PM 650x636 1

‘சூர்யா 42’ படத்தின் மாஸ் அப்டேட் ! 3டி தொழில்நுட்பத்தில் வெளியான மோஷன் போஸ்டர் இதோ !

இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ளார்.இதுவரை சிவகார்த்திகேயன் தனது மகன் முகத்தினை வெளிகாட்டவில்லை,தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயன் மகன் குகன் புகைப்படம் வெளியாகியுள்ளார். அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top