சின்னத்திரையிலிருந்து சீனாவுக்கே போன சிவகார்த்திகேயன்…! என்னன்னு தெரியுமா?

சின்னத்திரையிலிருந்து இன்று வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் கனா. கனா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதுவும் குறிப்பாக கனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் சாதனைகல்லாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தமிழகத்தில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்றாலும் வேறு ஒரு நாட்டில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது படக்குழுவினருக்கு பெருமை அளிப்பதாக காணப்படுகிறது.

அதன்படி கனா  திரைப்படம் அடுத்த மாதம் 18-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் கனா திரைப்படம் சீன ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதாக காணப்படுகிறது. எனவே சீனாவில் அடுத்த மாதம் 18ஆம் தேதி கனா  படம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

kanaa china

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment