Connect with us

கொரியன் படங்களை கிண்டலடிக்கும் சிவகார்த்திகேயன்! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

maxresdefault 22

பொழுதுபோக்கு

கொரியன் படங்களை கிண்டலடிக்கும் சிவகார்த்திகேயன்! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், முதலில் சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கியவர்,விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.தனது கடின உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்த்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. இந்த படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

cropped-Sivakarthikeyan-pic.jpg

இதை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும்.பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு அதில், நான் எப்போது பார்த்தாலும் அதில் நடிக்கிற கொரியன் எல்லோரும் ஒரே மாதிரி தான் தெரிவார்கள். எது ஹீரோ, எது ஹீரோயினி என்று கூட தெரியாது என விமர்ச்சித்துள்ளார்.

தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த நட்சத்திர நடிகர்! அணியில் இணைந்தவர் யார் தெரியுமா?

கொரிய மக்களைக் குறித்து பள்ளி குழந்தைகள் முன்பு பேசவேண்டிய அவசியம் என்னனு என்றும், எப்படி அவதூறாக பேசலாம்? என சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top