தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரை பிரபல நடிகையான முன்னணி கதாநாயகி பிரிட்டிஷ் இங்க்லீஷ் பேச வைத்துள்ளார்.
’இன்று நேற்று நாளை’ படம் இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது, இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து தான் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என இந்த படத்தின் நாயகி நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் ’உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் குறிப்பாக நீங்கள் என்னை படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு மிகவும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று நினைக்கின்றேன்’ என்றும் அவர் காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், கருணாகரன் உள்பட பலர் நடித்து வரும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.