‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதியால் ‘மாவீரன்’ படக்குழு எடுக்கும் அதிரடி முடிவு..!

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என கடந்த சில நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.

Sivakarthikeyan-Maaveeran-Movie-First-Look-HD-Poster

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் ஆகிய அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதைஅடுத்து திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 அல்லது 11ஆம் தேதி ரிலீசானால் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை ஜூலை மாதத்திற்கு மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வீடியோவில் அட்டகாசமான காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உட்பட பலர் நடித்துளனர். நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.