Entertainment
பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் புதிய படம்
‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல்முறையாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன், கோதண்டம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் சயின்ஸ் சம்பந்தப்பட்ட விறுவிறுப்பான த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘சீமராஜா’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
Wit all ur blessings & support starting my next film today wit talented @Ravikumar_Dir Produced by @RDRajaofficial music by our legend @arrahman sir..Very Happy to work wit @Rakulpreet #NiravShah sir @actorkaruna @iYogiBabu @Pali2285 @anbariv #kpykothandam ???????? #SK14 #SciFi pic.twitter.com/53y8HJCwN2
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2018
