Connect with us

விநாயகர் சதுர்த்தியை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயனின் புதிய படம் !!

sivakarthikeyan 1550577385180

பொழுதுபோக்கு

விநாயகர் சதுர்த்தியை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயனின் புதிய படம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் ரஜினி முருகன், மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, டாக்டர் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.  இதனால் அவருடைய மார்க்கெட் டபுள் மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த டான் படமானது  100 கோடிக்கு  மேல் வசூலில் கொடிக்கட்டி பட்டித்தொட்டியெல்லாம் தெறிக்க விட்டு வருகிறது. இதனிடையே சிவாவின் அடுத்தப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளன.

அந்த வகையில் இவர் நடித்த ‘SK20’ திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் மரியா, சத்யராஜ் மற்றும் பலர் நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளதாக தெரிகிறது.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்கள் விரைவில் வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top