Connect with us

ஏ.ஆர்.ரஹ்மானுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

Entertainment

ஏ.ஆர்.ரஹ்மானுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை மிக குறுகிய காலத்தில் பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முடிந்த பின்னர் அவர் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் ரவிகுமாருடன் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரஹ்மானின் இல்லம் சென்று அவரை சந்தித்தார். இந்த படத்தின் இசை எப்படி அமைய வேண்டும் என்று மூவரும் கலந்து ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top