Connect with us

அறிமுக இயக்குனரால் எங்கோ சென்ற சிவகார்த்திகேயனின் மார்க்கெட்!!!

don

பொழுதுபோக்கு

அறிமுக இயக்குனரால் எங்கோ சென்ற சிவகார்த்திகேயனின் மார்க்கெட்!!!

தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனென்றால் இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கடந்த சில நாட்களாக சந்தித்துக் கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு வெளியான டாக்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதன் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தது.

ஏனென்றால் இதில் சிவகார்த்திகேயன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். மேலும் டிரைலரை பார்க்கும்போது நிச்சயமாக மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான டான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாக காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் பெயரை ஆணித்தரமாகப் பதிய வைத்துள்ளது.

இதனால் டான் திரைப்படம் பல்வேறு விதமான சாதனைகளையும் செய்து கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக டான் திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top