தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார்
முதல்வரின் இந்த வேண்டுகோளை அடுத்து தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களால் முடிந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரமுகர்கள் பலர் லட்சக்கணக்கில் நிதி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே தல அஜித் 25 லட்சம், முருகதாஸ் 25 லட்சம், சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி என கொரோனா நிவாரண நிதியாக கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, வெற்றிமாறன் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர்
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முதல்வரை அவருடைய இல்லத்தில் சந்தித்து ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை அளித்தார். அதேபோல் ஜெயம்ரவி, மோகன்ராஜா மற்றும் எடிட்டர் மோகன் ஆகிய மூவரும் முதல்வரை சந்தித்து ரூபாய் 10 லட்சம் அளித்தனர். இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் முதல்வரை சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்து உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது