என்னது மீண்டும் மீண்டுமா? மூன்றாவது முறையாக ஜோடி சேர அழைத்த சிவகார்த்திகேயன்…. தயங்கும் நடிகை….!

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். இதுவரை தமிழ் படங்களில் மட்டும் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு தற்போது பிற மொழி படங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

டாக்டர்

அதன்படி தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனரான அனுதீப் முன்னதாக தெலுங்கில் இயக்கிய ஜாதி ரத்னாலு என்ற நகைச்சுவை படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே அனுதீப் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

தற்போது அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாக உள்ள புதிய படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

பிரியங்கா

ஆனால் படத்திற்கு கதாநாயகி தான் இன்னும் கிடைக்கவில்லையாம். எனவே படத்தின் கதாநாயகி வேட்டை தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் பிரியங்கா அருள்மோகனை படக்குழுவினர் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அனுகியுள்ளனர். ஏற்கனவே டாக்டர், டான் படங்களில் பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதனால் ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து எப்படி நடிப்பது என்று பிரியங்கா யோசிக்கிறாராம். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வெளியானதும் அதன் வரவேற்பை பார்த்துவிட்டு சம்பளத்தை சற்று உயர்த்தி புதிய படங்களில் ஒப்பந்தமாகலாம் என்று அம்மணி திட்டம் போட்டுள்ளாராம். அதனால் தற்போதைக்கு பதில் கூறாமல் மெளனம் காத்து வருகிறாராம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment