தனது பேமிலி பேக்ரவுண்டை பெருமையாக கூறும் நடிகர் சிவகார்த்திகேயன்!!

ஆரம்ப காலகட்டத்தில் காமெடியனாக களமிறங்கி, பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.அருங்காட்சியகம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான டாக்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததாக காணப்படுகிறது. இந்த மகிழ்ச்சியில் உள்ள சிவகார்த்திகேயன் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டசென்றிருந்தார்.

அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் “நான் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் பெருமையாகக் கூறினார்.

நான் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் காவலர் அருங்காட்சியத்தினை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்று கூறினார்.

அதோடு மட்டுமில்லாமல் போலீஸாக வேண்டும் என்ற லட்சியம் உடையவர்கள் அனைவரும் இந்த காவலர் அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டுமென்று நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு போலீசார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment