திரையரங்குகளில் டாக்டர்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

975c20cb1cb802995963c507db697560

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாரானது. இதனை அடுத்து மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை 

இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது, ஆனால் சன் நிறுவனத்திடம் ஏற்கனவே சாட்டிலைட் உரிமையை இந்த படத்தின் தயாரிப்பாளர் விற்பனை செய்து உள்ளதால் இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருவதை அடுத்து அனேகமாக அடுத்த மாதம் திரையரங்குகள் திறந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து டாக்டர் படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் 

டாக்டர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்றும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து வந்த வினய், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன என்பது தெரிந்தது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.