விஜய் படத்தை மிஸ் செய்த நடிகைக்கு கிடைத்த சிவகார்த்திகேயன் பட சான்ஸ்!

ff243dc13e77ac3211723568d4a46a72

விஜய் படத்தை இரண்டு முறை மிஸ் செய்த பிரபல நடிகை ஒருவருக்கு சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் என்று பேசப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் அந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். இதன் பின்னர் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று கூறப்பட்டது ஆனால் அந்த படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இரண்டு முறை விஜய் படத்தை மிஸ் செய்த ராஷ்மிகா மந்தனா தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்கிமா ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 

ராஸ்மிகா ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.