விஜய் பட அப்டேட்…. நெல்சனை கோர்த்து விட்ட சிவகார்த்திகேயன்.. ஜாலி அரட்டை

03872f4bd0b05f99eddcac98380abdd2

சிவகார்த்திகேயன் டாக்டர் பட இயக்குநர் நெல்சனை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இதை தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.  இத்துடன் ஒரு ஸ்பெஷல் வீடியோவும் இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் இருவாகும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதற்கு இயக்குநர் நெல்சன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். 

அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், ”விஜய் சார் படம் அப்டேட்??? (எப்படி கோர்த்துவிட்டேனா.?)” என ஜாலியாக கமன்ட் அடித்தார். அதற்கு நெல்சன், ”வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா..?” என கமன்ட் போட, ”ஏதோ உங்களுக்கு என்னால் முடிஞ்சது” என ரிப்ளை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். 

ட்விட்டரில் விஜய் படம் குறித்து சிவகார்த்திகேயனும் இயக்குநர் நெல்சனும் அடித்த ஜாலி அரட்டைக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் நெட்டிசன்ஸ், ”இது வேற மாறி, வேற மாறி” என இந்த பதிவுக்கு ரிப்ளை அடித்து வருகின்றனர். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.