அயலானை தொடர்ந்து அமரன்!.. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக வெற்றி பெறுவாரா?..

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு எஸ்கே 21 படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரை இன்று மாலை வெளியிட்டுள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்திற்கு ’அமரன்’ என்ற பெயரை வைத்துள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

எஸ்கே 21 டைட்டில் அமரன்:

இப்படத்தில் சிவகார்திகேயன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அமரன் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் நாளை சிவகார்திகேயனின் பிறந்த நாளையோட்டி இன்று மாலை அமரன் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் ரீலிஸ் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

சிவகார்திகேயன் ரொமான்டிக் ஹீரோவில் இருந்து ராணுவ வீரனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முகுந்த் 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் முன்று தீவிவாதிகளை சுட்டு கொன்று வீர மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்திகேயன் அமரன் படத்தில் முகுந்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை ஒரு காட்சியில் சட்டையில் முகுந்த் எனும் பெயர் இருப்பதை காட்டியே வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ராணுவ வீரராக நடித்துள்ள சிவகார்த்திகேயன்:

காமெடி நடிகராக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வந்த சிவகார்த்திகேயன் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக அஜித்தின் ஏகன் படத்த்ல் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்த்ல் காமெடியனாக அறிமுகமான அவர் மெரினா, மனங்கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஆரம்பித்து இன்று இந்த நிலைக்கு தன்னை தானே செதுக்கி முன்னேறியிருக்கிறார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் படம் ஏகப்பட்ட பில்டப்புகளும் வெளியாகி கடைசியில் பல்பு வாங்கி விட்டது. 5 ஆண்டுகள் தாமதமாக படம் வெளியான நிலையில், தான் பிரச்சனை எனக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு 80 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் கொடுத்தது. இந்நிலையில்,கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...